வங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயார் - விஜய் மல்லையா

Home

shadow

                                வங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயாராக இருப்பதாக வங்கி கடன் மோசடியாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப அடைக்காமல் வெளிநாடு சென்று பதுங்கி கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளிள் கடனாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  தான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், மீடியாக்களும் கூறி வருவது அனைத்தும் தவறானவை என்றும், கடன் தொகையை செலுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் முன் தான் ஒப்புக் கொண்ட பிறகும் தன்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனை அளிப்பதாகவும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப் பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தி வந்த தான், மாநில அரசுகளுக்கு கோடி கணக்கான பணத்தை அளித்துள்ளதாகவும்,. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் பணத்தை 100 சதவீதம் திரும்ப தர தான் தயாராக இருக்கும் போதும், அதனை ஏற்க மறுப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்,

இது தொடர்பான செய்திகள் :