வங்கிகளுக்கு அரசு உத்தரவு

Home

shadow


வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களின் பாஸ்போர்ட் விவரங்களைப் பெறுமாறு மத்திய அரசு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

விஜய மல்லையா, நீரவ் மோடி மெஹுல் சோக்சி போன்ற பிரபல தொழிலதிபர்கள், பொதுத்துறை வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. இதனைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை 45 நாள்களுக்குள் கேட்டுப் பெறுமாறு வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  கடன் பெற்றவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து நீரவ் மோடியின் ஃபயர் ஸ்டார் டயமண்ட் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :