வங்கியில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தவர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும்

Home

shadow

 

வங்கியில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தவர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த வங்கிகள் தவறிவிட்டன. இதேபோல் சந்தீப் சிங் என்பவர் அளித்த மனுவின் அடிப்படையில், வங்கி கடன் மோசடியாளர்கள் குறித்த தகவலை வெளியிட பிரதமர் அலுவலகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை ஏற்க அவை மறுப்பு தெரிவித்துவிட்டன. இந்நிலையில், வங்கியில் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்தவர்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை, அரசியல் சாசன கடமை மற்றும் அரசியல் ரீதியிலான கடமை பிரதமர் அலுவலகத்துக்கு உண்டு  எனவும், பல்வேறு பிரிவிலான தகவல்களை, வெளிப்படுத்தல் கொள்கை அடிப்படையில் வெளியிட முடியாது என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரானத என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ரிசர்வ் வங்கி முழுமையாக அலட்சியம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :