வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் - மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Home

shadow

                  வரிவசூல் அதிகரிக்கும்போது ஜி.எஸ்.டி. மேலும் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 18 மாத ஜி.எஸ்.டி. செயல்பாடு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், ஜி.எஸ்.டி.யில் ஆயிரத்து 216 பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படும் 183 பொருட்களுக்கு 0 சதவீதமும், 308 பொருட்களுக்கு 5 சதவீதமும், 178 பொருட்களுக்கு 12 சதவீதமும், 517 பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது 28 சதவீத வரி முடிவுபெறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சினிமா டிக்கெட் வரி 35 மற்றும் 110 சதவீதத்தில் இருந்து 12 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  புகையிலை பொருட்கள், சொகுசு வாகனங்கள், ஏர்கண்டிஷனர்கள், குளிர்பானங்கள், பெரிய டி.வி.க்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரிவிகிதம் 18 மற்றும் 12 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி.யில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என குறிப்பிட்டுள்ள அவர் முதல் ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ஜி.எஸ்.டி. மூலம் வரி வருவாய் கணிசமாக உயரும்போது வரிவிகிதம் மேலும் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  நாட்டில் இறுதியாக ஜி.எஸ்.டி.யில் 0 மற்றும் 5 சதவீதம் ஆகிய இரு வரிவிகிதங்கள் மட்டுமே இருக்கும் எனவும் ஆடம்பர பொருட்கள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இவற்றில் விதிவிலக்கானவை என்பதால் அவற்றுக்கு 18 மற்றும் 12 சதவீதங்களுக்கு பதிலாக ஒரு புதிய வரிவிகிதம் உருவாக்கப்படும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்

இது தொடர்பான செய்திகள் :