வாணியம்பாடியில் புதிதாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்துள்ளார்

Home

shadow

வாணியம்பாடி, மார்த்தாண்டம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் புதிய தொழிலாளர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கென கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய பன்மொழி உதவி மையம் தொடக்க விழா வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நீலோபர் கபில் கலந்துகொண்டு, புதிய மையங்களை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர், வாணியம்பாடியில் தொழிலாளர் வசதிக்காக புதிய ஈ.எஸ்.ஐ மருத்துவமனை விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். நிலுவையில் உள்ள தொழிலாளர் விபத்து வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.  

இது தொடர்பான செய்திகள் :