வெளிநாட்டில் பதுங்கி உள்ள நிதி மோசடியாளர் மெகுல் சோக்‌ஷி

Home

shadow

 

    வெளிநாட்டில் பதுங்கி உள்ள நிதி மோசடியாளர் மெகுல் சோக்‌ஷியின் சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.


பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டில் பதுங்கி கொண்ட வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர் மீது அமலாக்க துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


   இதில் ஆண்டிகுவா நாட்டில் பதுங்கி இருக்கும் முகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டு வர அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மெகுல் சோக்‌ஷியின் ஆயிரத்து 210 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளன. 


   இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம், முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பண மோசடி சொத்துக்கள் என முடிவு செய்ததோடு, சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :