வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Home

shadow

                        வேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விளைச்சல் குறைவாலும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம். கடந்த ஆண்டு 20 ஆயிரம் பருத்தி மூட்டைகளுக்குமேல் ஏலத்துக்கு வந்தது. இதனால் விவசாயிகள் சிறிதளவு லாபம் அடைந்தனர். வணிகர்களும் லாபம் அடைந்தனர். ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாவட்டத்தில் மழை குறைந்து வறட்சி நிலவுவதால் பருத்தி விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும், ஏலத்துக்காக எடுத்து வந்த பருத்திகள் மூட்டை மூட்டையாக குவிந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்

விலை குறைவு மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக, பருத்தி மூட்டைகளை வாங்கி செல்லக் கூட ஆட்கள் இல்லை என வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 20 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 ஆயிரம் பருத்தி மூட்டைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. வறட்சி மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பருத்தி பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உடனடியாக உதவ முன் வர வேண்டுமென பருத்தி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :