2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது

Home

shadow

                            2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.


2017-ல் 6 புள்ளி 7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2018 ல் 7 புள்ளி 3 சதவீதமாகவும், 2019 ல் 7 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளதுமுதலீடு அதிகரிப்பு காரணமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதையே பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்புப்படி, பொருளாதாரம் வளரும் பட்சத்தில், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சியானது நடப்பாண்டில் பூஜ்யம் புள்ளி 7 சதவீதமும், 2019-ல் 1 புள்ளி 2 சதவீதமும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :