40,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த பங்குச்சந்தை

Home

shadow

            பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை எதிரொலியாக வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

        வாக்கு எண்ணிக்கையின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது 

        வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜக முன்னிலை பெற்று வந்ததை தொடர்ந்து இன்று காலை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்தது. பின்னர் மேலும் 400 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் பங்குசந்தையின் சென்செக்ஸ் முதல் முறையாக 40,000 புள்ளிகளை கடந்து வரலாறு படைத்துள்ளது. 

இதே போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 69.66 ரூபாயாக உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :