FRDI மசோதா திரும்ப பெறப்பட்டது

Home

shadow


FRDI மசோதா எனப்படும் நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகள் திவாலாவதை தடுக்கும் வகையிலும், மக்கள் டெபாசிட் செய்த பணத்தை பாதுகாக்கும் வகையிலும் நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த மசோதாவில் இருந்த சில சாராம்சங்கள் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், வங்கிகள் மீதான நம்பிக்கையை இந்த மசோதா பாதிக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.  இந்நிலையில் இந்த மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார் நிதித் தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதா குறித்து மக்களிடம் அச்சம் நிலவுவதால் இந்த மசோதாவை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :