1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி - Operation Torch தொடங்கியது

Home

shadow


Operation Torch தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராக ஓர் அணியாக திரண்டன. ஜெர்மனிக்கு ஆதரவாக 1940ஆம் ஆண்டு களமிறங்கிய இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டது. இரண்டாம் உலகப்போர், ஆசியா, ஐரோப்பா கண்டங்களை தாண்டி ஆப்ரிக்காவிலும் நடைபெற்றதுக்கு இதுவே முக்கிய காரணம். ஆப்ரிக்காவின் வடக்கு பகுதியில் 1940ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1943ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்ற ராணுவ தாக்குதல்கள் North African Campaign என அழைக்கப்படுகிறது. ஆப்ரிக்காவில் நடந்த சண்டையில், ஆரம்ப கட்டத்தில் இத்தாலி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அதே காலகட்டத்தில், சோவியத் ராணுவம் மீது ஜெர்மனி நடத்திய தாக்குதலை திசைதிருப்பும் வகையில், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவம் ஐரோப்பாவில் அச்சு படைகள் மீது தாக்குதல் நடத்த, சோவியத் வலியுறுத்தியது. ஜெர்மன் படைகளை திசைதிருப்பும் வகையில் பிரிட்டிஷ் படைகள், French North Africa என்று அழைக்கப்பட்ட வடக்கு ஆப்ரிக்காவில் இருந்த பிரெஞ்சு காலனிகளுக்கு தனது படைகளை அனுப்பியது. இங்கிலாந்துக்கு ஆதரவாக அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பியது. இதுவே Operation Torch என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மத்தியதரைக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நேச நாடுகள் முடிவெடுத்தன.

இது தொடர்பான செய்திகள் :