அப்சரா அணு ஆராய்ச்சி உலை நிறுவப்பட்டது

Home

shadow


     1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  4ஆம் நாள் அப்சரா அணு ஆராய்ச்சி உலை நிறுவப்பட்டது. 1954 ஆம் ஆண்டு அணு சக்தி ஆணையத்தின் கீழ் அணு உலைகள் மற்றும் தொழில்நுட்பம் மேம்பாடு குறித்து நடத்தப்பட்ட அனைத்து ஆராய்சிகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அணு சக்தி மையம் நிறுவப்பட்டது. அதுவரை Tata Institute of Fundamental Research-இல் அணு சக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைத்து விஞ்ஞானிகளும் அணு சக்தி மையத்துக்கு மாற்றப்பட்டனர். இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட Homi Bhabhaவின் மறைவுக்கு பின்னர் இந்த மையத்தின் பெயரை, பாபா அணு ஆராய்ச்சி மையம் என மாற்றப்பட்டது. பன்முக ஆராய்ச்சி மையமாக திகழும் இந்த மையத்தில் அணு அறிவியல், பொறியியல் மற்றும் அவை தொடர்பான பல்வேறு ஆராச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆராய்ச்சி அணு உலைகளில் ஒன்றான அப்சராவை பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது. இங்கிலாந்து நாட்டின் உதவியால் நிறுவப்பட்ட  இந்த அணு உலையை இயக்குவதற்கு தேவையான எரிபொருளில் 80 சதவிகித செரியூட்டப்பட்ட யுரேனியத்தை இங்கிலாந்து வழங்கியது. அப்சரா அணு உலை, நியூட்ரான் இயக்க பகுப்பாய்வு, கதிர்வீச்சால் ஏற்படும் சேதம் குறித்த ஆய்வு,  தடயவியல் ஆராய்ச்சி போன்ற பல ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கதிரியக்க உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காகவும் உபயோகிக்கப்படுகிறது.  

இது தொடர்பான செய்திகள் :