பாண்டிச்சேரியை கைப்பற்றியது இங்கிலாந்து

Home

shadow

                      1761 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி 1674 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி பாண்டிச்சேரியில் வர்த்தக மையங்களை நிறுவியது.அதன் பின் பாண்டிச்சேரி இந்தியாவின் முக்கிய பிரெஞ்சு குடியேற்ற இடமாக மாறியது. டச் மற்றும் ஆங்கிலேயர்களும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினர். இவர்களுக்குள் சண்டை மூண்டது. 1693-ல் டச் பாண்டிச்சேரியை கைப்பற்றியது. ஆனால் 1699-ல் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தப்படி பாண்டிச்சேரியை பிரான்சிடம் திரும்பக் கொடுத்தது. 17421763 நடந்த ஆங்கிலோ-பிரெஞ்சு போரின் போது பலமுறை பாண்டிச்சேரி இரு நாடுகளிடையே கைமாறியது.1761 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பாண்டிச்சேரியை கைப்பற்றியது இங்கிலாந்து.பாரிஸ் ஒப்பந்தப்படி பாண்டிச்சேரியை பிரான்சிடம் திரும்பக்கொடுத்தது பிரிட்டன். மீண்டும் 1793 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை ஆக்கிரமித்த பிரிட்டன்1814-இல் மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைத்தது. 1850களில் இந்தியா முழுக்க பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குசென்ற பின், பாண்டிச்சேரி, மஹே, யாணம், காரைக்கால் ஆகிய பகுதிகளை பிரான்சுக்கு விட்டுக்கொடுத்தது பிரிட்டன். 1954ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்தது, இதற்கான சட்டப்படி நடவடிக்கை 1962 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :