1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் - சர் சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தார்

Home

shadow


சர் சந்திரசேகர வெங்கட ராமன்  பிறந்தார். இந்திய அறிவியல் அறிஞரான இவருக்கு 1930ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்தது. சி.வி.இராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7 தேதி  தமிழ்நாட்டில் திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். விசாகப்பட்டினத்தில் தன் பள்ளி படிப்பை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்தார். 1907ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால் கணக்காளராக சேர்ந்தாலும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்த்ரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செய்முறை ஆய்வுகள் நடத்தினார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் பணிப்புரிந்தார். பின்னர் 1926ஆம் ஆண்டு  இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். அதன் பின் அவர்  நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில்  இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். 1928 ஆம் ஆண்டு ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர் A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் முடிவுகளை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ஆம் ஆண்டு  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொருள்களின் பண்புகளைக் கண்டறிய பயன்படுவதால் உலக புகழ் அடைந்ததது. இவர் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி மறைந்தார்.

இது தொடர்பான செய்திகள் :