1920ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி

Home

shadow

லீக் ஆஃப் நேஷன்ஸ் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்தது பின், அமைதி குறித்து பேசும் வெர்சாய்ஸ் சமாதான மாநாடு என்று அழைக்கப்படும் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்றது.

 

          இதில் 32 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபெற்றனர். இதில் லீக் ஆஃப் நேஷன்ஸ் என அழைக்கப்படும் உலக நாடுகள் கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலக நாடுகளின் கூட்டமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ்1920 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நிறுவப்பட்டது. இதுவே உலக நாடுகளிடையே அமைதி நிலவுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட முதல் சர்வதேச அமைப்பாகும். கூட்டு பாதுகாப்பு, ஆயுதக்குறைப்பு மூலம் போர்களைத் தடுத்தல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்வதேச பிரச்சனைகளை தீர்த்துவைத்தல் போன்றவையே லீக் ஆஃப் நேஷன்ஸ்-இன் முக்கிய குறிகோள்களாக இருந்தன. 1935ஆம் ஆண்டு அதிகப்படியாக 58 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருந்தன.

          உலக நாடுகள் அமைப்பு ஒரு திறனற்ற அமைப்பாகவே இருந்தது. அமெரிக்கா இதில் உறுப்பு நாடாக இல்லாதது ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. சோவியத் ரஷ்யா சில ஆண்டுகள் மட்டுமே இதில் உறுப்பினராக இருந்தது. ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் வெளியேறியது உட்பட பல காரணங்களால் இந்த அமைப்பு திறனற்றதாகவே இருந்தது. 26ஆண்டுகளுக்குப் பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ்அமைப்பை முடிவுக்கு வந்தது.  இதுவே இரண்டாம் உலகப் போருக்கு பின் ஐக்கிய நாடுகள் சபை உருவாக முன்னோடியாக இருந்தது.

இது தொடர்பான செய்திகள் :