1975 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள்

Home

shadow


            சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைந்தது. 1947 ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டனிடம் இருந்து விடுதலை அடைந்தபோது சிக்கிமும் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான பொதுவாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975 ஆம் ஆண்டில் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5 சதவீத சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 1975 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் சிக்கிம் இந்தியாவின் 22 ஆவது மாநிலமாக இணைந்தது.

இது தொடர்பான செய்திகள் :