அமெரிக்க அரசியலமைப்பில் 21-வது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது

Home

shadow

              1933 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது சட்டத் திருத்தம் ratify செய்யபட்டது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அடிப்படையான சட்டத்தை குறிக்கும். அமெரிக்க அரசின் சட்டமன்றம், நீதிப் பிரிவு, மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட செயற்குழு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்குகிறது. செப்டம்பர் 17, 1787ஆம் ஆண்டு ஆட்சி சட்டமானது. இவ்வரசியலமைப்பு சட்டமானதுக்கு பிறகு 27 முறை மாற்றப்பட்டது. இதில் முதல் 10 மாற்றங்கள் உரிமைகளின் சட்டம் என்று அழைக்கப்படுகின்றன. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது சட்டத் திருத்தம் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 18-வது சட்டத் திருத்தம் அந்நாட்டில் மதுவிலகை அமல்படுத்தியது. மது தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை - சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை மாற்றக் கோரி கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து, 21வது சட்ட திருத்தத்தின் மூலம் 18-வது சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :