அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் அமர்வு அமைக்கப்பட்டது

Home

shadow

           1790 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் அமர்வு. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டம் கட்டுரை (article) மூன்றின் படி அமெரிக்க உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களுள் உச்சநீதிமன்றமே மிக உயரியது. 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ஐந்து நீதிபதிகளைக் கொண்ட முதல் அமர்வு. உச்ச நீதிமன்றத்துக்கு என நிரந்தர கட்டடம் இல்லாததால் நியூயார்கில் உள்ள ராயல் செலாவணி (Royal Exchange) கட்டடத்தில் நீதிமன்றத்தின் செயல்படத்தொடங்கியது. இந்த வரலாற்று நிகழ்வைக் காண மக்கள் பலர் ஆர்வமோடு வந்தனர். ஒரு வார காலம் எந்த வழக்குகளும் இல்லாமல் நீதிபதிகள் இருந்ததால், நீதிமன்ற செயல்பாட்டை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அவர்கள் ஊர்களுக்கு திரும்பினர். உச்சநீதிமன்றத்துக்கான உரிய மரியாதை 1801ஆம் ஆண்டு நீதிபதி மார்ஷல் பதிவியேற்ற பின்பே கிடைக்கத் தொடங்கியது. Judicial Review எனப்படும் நீதிமுறை மேலாய்வுக்கு இவரின் பல தீர்ப்புகள் முன்னோடியாக இருந்தன. 1935ஆம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் இதற்கான புதிய கட்டம் கட்டப்பட்டது. தற்போது ஒன்பது நீதிபதிகளை கொண்ட நீதிமன்றமாக அமெரிக்க உச்சநீதிமன்றம் வாஷிங்டன் டிசி-யில் செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :