அமெரிக்காவின் தேசிய விடுமுறை தினம்

Home

shadow

           1986 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் கருப்புகாந்தி என அழைக்கப்பட்ட சமூக உரிமைப் போராளியான மார்டின் லூதர் கிங் ஜூனியரைக் கவுரவிக்கும் விதத்தில் ஜனவரி மூன்றாவது திங்கட்கிழமை அமெரிக்காவில் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சகோதரத்துவம், சமத்துவம், சமாதானம் ஆகியவற்றைத் தாரக மந்திரங்களாகக் கொண்டு அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் அறப்போராட்டத்தை நடத்தியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். 1963 ஆம் ஆண்டு கருப்பின மக்களுக்கு' வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்று இவர் நடத்திய பேரணி அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. 'எனக்கொரு கனவுஇருக்கிறது' என்ற புகழ்பெற்ற சொற்பொழி வினை அவர் இந்தப் பேரணியில் ஆற்றினார். எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப ஒருநாள் இந்த தேசம் எழுச்சி பெறும், அந்த நம்பிக்கையின்படி இந்த தேசம் செயலாற்றும் என்று எனக்கொரு கனவு இருக்கிறது என்பதாகத் தொடங்கிய மார்ட்டின் லூதர் கிங்கின் அந்த எழுச்சி உரை வரலாற்றில் இடம் பெற்றது. வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு 1964 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இவரை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள், மார்ட்டின் லூதர் கிங் தினம் அமெரிக்காவின் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது


இது தொடர்பான செய்திகள் :