அமெரிக்க-சீனா இடையே வர்த்தக ஒப்பந்தகள் கையெழுத்தானது

Home

shadow

              1979 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள்  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ராஜீய ரீதியிலான மற்றும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 1949 ஆம் ஆண்டில் சீனாவில் உருவான மக்கள் குடியரசை ஏற்காமல் தைவானுடன் ராஜீய ரீதியில் உறவுகொண்டாடி வந்தது அமெரிக்கா. 1950 ஆம் ஆண்டு கொரியப் போரின்போது சீன மக்கள் குடியரசும் அமெரிக்காவும் எதிரெதிர் அணிகளுக்கு ஆதரவளித்தன. சீன மக்கள் குடியரசு தைவான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது அங்கு அமெரிக்கா தனது படைகளைக் குவித்தது. 60களில் நடைபெற்ற வியட்நாம் போரில் தெற்கு வியட்நாமுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அதற்கு எதிராக, வடக்கு வியட்நாம் கம்யூனிஸ்டுகளுக்கு சீனா உதவியது. இவ்வாறு எதிரெதிர் துருவங்களில் நின்ற அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்படுவதற்கான சூழலை உருவாக்க அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனும் சீனத் தலைவர் மா சேதுங்கும் முயன்றனர். இதன் ஒருபகுதியாக, 1971 ஆம் ஆண்டு, அமெரிக்க டேபிள் டென்னிஸ் குழுவை தங்கள் நாட்டிற்கு வருமாறு சீனா நல்லெண்ண அழைப்பு விடுத்தது. இது உலக அரங்கில் பிங் பாங் டிப்ளமசிஎன்று அழைக்கப்பட்ட்து. பின்னர் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972 ஆம் ஆண்டு சீனா சென்று மாசேதுங்கையும் சூ என்லாயையும் சந்தித்தார். இதனையடுத்து படிப்படியாக இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கின. தைவானுடனான ராஜிய உறவை முறித்துக்கொண்ட அமெரிக்கா, சீன மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கும் சீன துணைப் பிரதமர் டெங் ஜியோபிங்குக்கும் இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் 1979 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாளில் கையெழுத்தாயின.


இது தொடர்பான செய்திகள் :