அருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது

Home

shadow

                                     1987ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அருணாசலப் பிரதேசம் என்றால் சூரியன் உதிக்கும் நாடுஎன்று பொருள். அருணாச்சல பிரதேசம், தெற்கு எல்லையாக அசாம், மேற்கில் பூட்டான், வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா, மற்றும் கிழக்கே மியான்மர் எல்லையாகக் கொண்ட ஒரு அடர்த்தி குறைவான மக்கள்தொகையுடன், மலைப்பாங்கான பகுதியில், துணைக்கண்டத்தின் தீவிர வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.காலிகா புராணம், மகாபாரதத்தில் இந்தப் பகுதிகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. ஆதிகாலத்தில் திபெத், பர்மாவிலிருந்து பழங்குடியினர் குடியேறினர். வடமேற்கு பகுதியை மொன்பா வம்சமும் வடக்குப் பகுதியைப் பூட்டானும் திபெத்தும் மற்றப் பகுதிகளைச் சுதியா வம்சமும் பின்னர் வந்த அஹோம் வம்சமும் ஆண்டது. 1858ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வந்தனர். 1875ஆம் ஆண்டு  வடக்கு எல்லைப்புறப் பகுதியைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப் படிப்படியாக ஊடுருவல் கொள்கையை ஆங்கில அரசு பின்பற்றியது. சீன இந்திய எல்லைப் பிரச்சினை மூலமாக அருணாசலப்பிரதேசத்தின் மீதான ஆதிபத்திய உரிமை உலகிற்கு தெரியவந்தது. 1888ஆம் ஆண்டு  ஆங்கிலேயரின் பகுதியாகும் வடக்கு அருணாசலப்பிரதேசப் பகுதியானது திபெத் மற்றும் பூடான் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.1913- 1914 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியா சீன எல்லைப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சர் ஹென்றி மக் மோகன் எல்லை வரைபடம் தயாரித்தார். இந்த எல்லைக்கோடு திபெத் பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.ஆனால் 1949ஆம் ஆண்டு  திபெத், சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்ட நிலையில் சீனா மக்மோகன் எல்லைக் கோட்டை ஏற்க மறுதத்தால் 1962ஆம் ஆண்டு சீன- இந்திய யுத்தம் ஏற்பட்டு அருணாச்சலப் பிரதேசப் பகுதிகள் சீன இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இருந்தபோதும் சீனா மக்மோகன் எல்லைப் பகுதிக்கு திரும்பிச் சென்றது. 1987ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசம் முழு அங்கீகாரம் பெற்ற மாநிலமாக ஆனது.


இது தொடர்பான செய்திகள் :