அலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்

Home

shadow

          1709 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி நான்கு வருடத்துக்கும் மேல் தீவில் தனியாக வாழ்ந்த அலெக்ஸாண்டர் சேல்கிரிக் (Alexander Selkirk) மீட்கப்பட்டார். ஸ்காட்லாந்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் சேல்கிரிக் (Alexander Selkirk) கடல் சண்டைகளில் ஈடுபடும் கப்பல்களில் பணியாற்றியவர். 1676 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர் இவர் சிறு வயது முதலே மூர்கத்தனமானவராக வளர்ந்தார். பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன் கடல் சண்டைகளில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். 1703  ஆம் ஆண்டு கடல் சண்டையில் ஆர்வம் கொண்ட ஆங்கிலேயர் வில்லியம் டிம்பிரி (William Dampier) என்பவரது கப்பலில் பணியில் சேர்ந்தார். இவரது ஆயுதம் ஏந்திய கப்பல் அந்நிய கப்பல்கள் மீது போர் தொடுக்க ஆங்கில அரசு அனுமதி வழங்கியிருந்தது. செயின்ட் ஜார்ஜ் (St George) கப்பலும் அதற்கு துணையாக சிங்கை துறைமுகம் (Cinque Ports) கப்பல்ளும் தென் பசிபிக் கடலை நோக்கி பயணத்தை தொடங்கின.   1704 ஆம் ஆண்டு   டிம்பிரி (Dampier) மற்றும் சிங்கை துறைமுகம் (Cinque Ports) கப்பலின் கேப்டன் தாமஸ் ஸ்ட்ராட்லிங் (Thomas Stradling) இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் தனியாக செயல்பட முடிவு செய்தனர். சிங்கை துறைமுகம் (Cinque Ports) கப்பல் Juan Fernández  என்ற தீவில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக கேப்டன் தாமஸ் ஸ்ட்ராட்லிங் (Thomas Stradling) , அவர் கீழ் பணியாற்றிய அலெக்ஸாண்டர் சேல்கிரிக் (Alexander Selkirk) கை தீவில் இறக்கிவிட்டு சென்றார். ஒரு கைத்துப்பாக்கி, தொப்பி, கத்தி, சமையல் பானை, பைபிள், படுக்கை மற்றும் சில ஆடைகளை சேல்கிரிக் (Selkirk)-கிடம் தந்துவிட்டு கப்பல் புறப்பட்டது. நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் தீவில் தனியாக வாழ்ந்தார் சேல்கிரிக் (Selkirk). ஆரம்ப காலகட்டத்தில் கடினமாக இருந்தாலும், தீவின் சூழலுக்கு பழகினார். தீவில் இரண்டு சிறு குடிசைகள் அமைத்தும், அங்கு இருந்த ஆடுகளை வேட்டையாடி உண்டும் உயிர் வாழ்ந்தார்.  1709 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி அங்கு வந்த ஒரு ஆங்கிலக் கப்பல் இவரை தீவில் இருந்து விடுவித்தது.


இது தொடர்பான செய்திகள் :