ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது

Home

shadow

       1884 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. இது ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட முக்கிய வரலாற்று அகராதி. வரலாற்று அகராதி என்பது சொற்களின் தற்போதைய பொருள் மட்டும் அல்லாமல், அவற்றின் வடிவங்கள் மற்றும் வரலாற்று வளர்ச்சியை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும். ஒரு சொல் எப்படி வளர்ந்தது என்பது பற்றிய விளக்கம் இதில் இடம்பெறும். 1844 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அகராதிகள் மீது அதிருப்தி கொண்ட லண்டனில் இருந்த அறிஞர்கள் சிலர் ஒன்று கூடி புதிய அகராதிக்கான திட்டத்தை தொடங்கினர். ஆனால் அதற்கான பணி 1857ஆம் ஆண்டு தான் தொடங்கியது.  பண்பாட்டு சங்கம் (Philological Societyஎன்று அழைக்கப்படும் மொழி வளர்ப்பு சங்கம் 1858 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அகராதியை உருவாக்குவது என முடிவு செய்தது. தன்னார்வ வாசகர்கள் குழு அமைக்கப்பட்டது. இவர்களுக்கு தனித்தனியே புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. அதிலுள்ள வாசகங்கள் மற்றும் சொற்கள் உபயோகிப்பு குறித்து அவர்கள் குறிப்புகளை எடுத்தனர். 1878ஆம் ஆண்டு இந்த புதிய அகராதியின் தொகுப்பை வெளியிட ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் (Oxford University Press) ஒப்புக்கொண்டது. புதிய ஆங்கில அகராதிக்கான வேலை 1857ஆம் ஆண்டு தொடங்கினாலும், 1884 ஆம் ஆண்டு தான் அது வெளியிடப்பட்டது. வரலாற்றுக் கோட்பாடுகளுடன் ஒரு புதிய ஆங்கில அகராதிஎன்ற பெயரிலேயே இது முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந்த அகராதி முதலில் வெறும் 4,000 பிரதிகளே விற்பனை ஆனது. 1895ஆம் ஆண்டு தி ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் (Oxford English Dictionary) என்று பெயரிடப்பட்ட இந்த அகராதி உலகெங்கும் பல்லாயிரம் கோடி பிரதிகள் விற்பனையாகி வருகிறது.


இது தொடர்பான செய்திகள் :