இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா மறைந்தார்

Home

shadow

                                1901 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி இங்கிலாந்தின்  மகாராணி விக்டோரியா மறைந்தார்.1819ஆம் ஆண்டு பிறந்த விக்டோரியா 1837 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில் இங்கிலாந்தின்மகாராணியானார்1840 ஆம் ஆண்டு இளவரசர் Albertடை மணந்தார். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. 1861ஆம் ஆண்டு Albertடின் மறைந்ததால் கடும் துயருற்ற விக்டோரியா மகாராணி சில காலம் வெளயுலகுக்கு வருவதை தவிர்த்தார்.இவருடைய காலத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல மடங்கு தன்னை விரிவுபடுத்தியது. 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற புரட்சிக்கு பின், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பனி கலைக்கப்பட்டு, இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சென்றது. இந்தியாவில் நடைபெற்ற கலவரங்களாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளாலும் பெரிதும் கவலையுற்றார். இந்திய மக்கள் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றல்லாம் என வலியுறுத்தினார். 1876ஆம் ஆண்டு இந்தியாவின் ராணியானார்.1887 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விக்டோரியா மகாராணிபதவியேற்றதன் பொன்விழா ஆண்டை கொண்டாடியது.இங்கிலாந்தை நீண்ட காலம் ஆண்ட மகாராணி என்ற பெருமையை பெற்ற விக்டோரியா. 1901 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தன்னுடைய 81 வது வயதில் முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் காலமானார்.

இது தொடர்பான செய்திகள் :