இங்கிலாந்தின் ராணியாக முடிசூடப்பட்டார் முதலாம் எலிசபெத்

Home

shadow

               1559 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்தின் ராணியாக முடிசூடப்பட்டார் முதலாம் எலிசபெத். இங்கிலாந்தின் மன்னர் Henry VIII , அவரது இரண்டாம் மனைவி Anne Boleyn-ஆகியோரின் மகளாக பிறந்தார் Elizabeth. மன்னருடன் Anne Boleynக்கு நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், Elizabethசட்டவிரோதமாக பிறந்த குழந்தை என அறிவித்தனர். இவருடைய மூன்றாம் வயதில் அவரது தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தந்தை இறந்த பின் கிறிஸ்தவர்களில் protestant பிரிவினரை ஆதரித்த குற்றத்திற்காக ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார் Elizabeth. பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் தன்னுடைய 25வது வயதில் இங்கிலாந்தின் ராணி ஆனார். English Protestant church-சை நிறுவிய ராணி எலிசபெத்தின் காலத்தில் ஆங்கில நாடகத்துறை பெரிதும் வளர்ச்சி அடைந்தது. அதற்கு William Shakespeare போன்றோரின் பங்களிப்பு உதவியது. இவரை கொல்ல பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவற்றை முறியடித்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசியாக 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தின், இத்தாலி, கிரேக்க மொழிகளையும் ஐரிஷ் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளையும் அறிந்த ராணி எலிசபெத் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.


இது தொடர்பான செய்திகள் :