இந்தியா பூர்ண ஸ்வராஜ்யமாக அறிவிக்கப்பட்டது

Home

shadow

          1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பூர்ண ஸ்வராஜ் அதாவது முழு சுதந்திரம் அடைந்ததாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது.முதல் உலகப்போருக்கு பின் பிரிட்டிஷ் அரசாங்கம் மீது இந்திய மக்களின் கோபம் அதிகரித்தது. 1928 ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள சைமன் கமிஷனை அமைத்தது பிரிட்டிஷ் அரசு.இந்த ஆணையத்தில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதற்காக இந்தியா வந்த சர் ஜான் சைமன் (Sir John Simon) மற்றும் பிற உறுப்பினர்களுக்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் மோதிலால் நேருவின் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. இதில் மற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இந்தியாவுக்கு சுயாட்சி அதிகாரம் தர வேண்டும் என ஆணையம் முடிவு செய்தது. ஆனால் இவர்களின் கருத்தை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் இந்தியா ஆங்கிலேயர்களின் அனைத்து வித கட்டுப்பாடுகளில் இருந்தும் இந்தியா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் தன்னாட்சி அதிகாரத்தையே காந்தி வேண்டினார். 1928ஆம் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், தன்னாட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசு தர வேண்டும் என காந்தி வலியுறுத்தினார்.இதனையும் மறுத்தது ஆங்கிலேய அரசு. 1929ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியா முழு சுதந்திரம் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1930ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பூர்ண ஸ்வராஜாக அறிவிக்கப்பட்டது.இருபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் இந்தியா குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :