இன்சுலின் மருந்தில் உள்ள ஒவ்வாமை தன்மை சரிசெய்யப்பட்டது

Home

shadow

       1922 ஆம்ஆண்டுஜனவரி 11ஆம்தேதி அமெரிக்காவின் டொரோண்டோ மகாணத்தில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் Leonard Thompson-னுக்கு biochemist  James Collip  என்பவர் இன்சுலினை செலுத்தினார். ஆனால் அது தூய்மையாக இல்லாத காரணத்தால் ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து COLLIP 12 நாட்கள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்து இன்சுலின் மருந்தில் இருந்த ஒவ்வாமை தன்மையை சரி செய்தார். அதன்பின் இரண்டாம் முறை ஜனவரி 23 ஆம் தேதி அதே சிறுவனுக்கு மீண்டும் இன்சுலின் செலுத்தப்பட்டது. இந்த முறை சோதனை முற்றிலும் வெற்றிகரமாக அமைந்தது, சிறுவனின் உடலில் இருந்த சர்க்கரையின் அளவு சீரானது. இன்சுலின் என்றால் லத்தின் மொழியில் தீவு எனப் பொருள். 1869, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த Paul Langerhans என்ற மாணவர் கணையத்தில் ஆங்காங்கே சில திசுக்கள் இருப்பதை கண்டறிந்தார். பிற்காலத்தில் இதற்க்கு Langerhans தீவு என பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த திசுகளிலிருந்து வரும் சுரப்பு நீர் உணவு செரிமானத்துக்கு உதவும் என கண்டறிந்தனர். 1889, ஆம் ஆண்டு நாயின் கணையத்தை எடுத்து அதன் சிறுநீரை சோதனை செய்த போது அதில் சர்க்கரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணைய திசுக்களில் இருந்து இன்சுலின் சுரப்பை பிரித்து எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்சுலின் குறித்த ஆராய்சிகள் பல நாடுகளில் நடைபெற்றன. 1923 ஆம் ஆண்டு Frederick Banting  மற்றும் J.J.R. Macleod க்கு இன்சுலினை பிரித்து எடுத்ததுக்காக மருத்துவத்துறைக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப்பரிசை அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த Best மற்றும்James Collip உடன் பகிர்ந்து கொண்டனர்

இது தொடர்பான செய்திகள் :