இமாசலப் பிரதேசம் மாநிலமாக அறிவிக்கப்பட்டது

Home

shadow

        1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் நாள் இமாசலப் பிரதேசம் உருவானது. இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-வது மாநிலமாக 25 ஜனவரி 1971-ல் அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா.  குலு, மனாலி, தரம்சாலா ஆகியவை மற்ற பெரிய நகரங்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபெத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தரம்சாலாவில் வசித்து வருகின்றனர்.. இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இந்த மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவே இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும்.


இது தொடர்பான செய்திகள் :