ஈரான்-நேசநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

Home

shadow

      1942 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க, பிரிட்டிஷ், ரஷ்யப் படைகள் பெர்ஷியப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. முன்னதாக, ஜெர்மனிக்கு உணவுதானியங்களை அளித்து பதிலுக்கு தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டிருந்தது ஈரான். ஆனால் ஈரானின் எண்ணெய் வளமும், ஐரோப்பியப் பகுதியிலிருந்து போர்த் தளவாடங்களை ரஷ்யாவுக்கு அனுப்பும் பாதையும் கூட்டுப்படைகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தன. இதனால் ஈரான் மன்னர் மொஹமத் ஷாவுடன் நேச நாடுகள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி, ஆக்கிரமிப்புகளிலிருந்து ஈரானுக்குப் பாதுகாப்பு அளிக்க நேச நாடுகளின் கூட்டுப் படை உறுதியளித்தது. போர் முடிந்து ஆறு மாதங்களுக்குள் ஈரானை விட்டு நேசநாட்டுப் படைகள் வெளியேறும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. பதிலுக்கு, போரில் நேசநாடுகள் வெற்றிபெற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு ஈரான் ஒப்புக்கொண்டது. இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்த இந்த ஒப்பந்தம் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாளில் கையெழுத்தானது.


இது தொடர்பான செய்திகள் :