உலகப்போருக்கு பின் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது

Home

shadow

                          1919 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் உலகப்போருக்கு பின் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள வெர்செயில்ஸ்யில்  அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் உலகப்போரில் வெற்றிபெற்ற பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் பாரிஸ் நகரத்தில் அமைதி மாநாட்டை தொடங்கின. போரில்லாதஅமைதி குறித்து அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன்  மாநாட்டில் வலியுறுத்தினார். போரில் பலத்த சேதங்கள் அடைந்த ஜெர்மனியை மற்ற நாடுகள் கடுமையாக நடத்தக் கூடாது என அவர் வலியுறுத்தினார். ஜெர்மனியை தண்டித்து அதன் நிலையை குலைப்பது மட்டுமே போரில் ஏற்பட்ட சேதத்துக்கு ஈடாக இருக்கும் என பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள் கருதினர். இறுதியாக League of Nations உருவாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக வூட்ரோ வில்சன் மற்ற நாடுகளின் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டார். அமைதி மாநாட்டில் ஜெர்மனி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆறு மாதங்கள் நடந்த மாநாட்டுக்கு பின் முதல் உலகப்போருக்கு ஜெர்மனி தான் காரணம் எனக் கூறிய (Treaty of Versailles) வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை கையெழுத்திடப்பட்டது. இதுவே ஜெர்மன் நாட்டு மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போருக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :