உலகின் முதல் அணு நீர் மூழ்கி கப்பல் அறிமுகம்

Home

shadow

                 1954 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அணு சக்தி மூலம் இயங்கும் முதல் நீர் மூழ்கிக் கப்பல் அறிமுகம். வழக்கமாக நீர் மூழ்கி கப்பல் டீசல் போன்ற எரிபொருள் கொண்டு இயக்கப்படும். அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் அணுமின்சக்திமூலம்இயக்கப்படும். சாதாரண நீர் மூழ்கி கப்பலுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி நீர் மூழ்கி கப்பலின் செயல்திறன்அதிகம். அணு உலைகள் இயங்க காற்றின் தேவை இல்லை. அதனால் அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பல் காற்றுக்காக கடலின் மேல் பரப்புக்கு வரும் அவசியம் இல்லை. அணு உலைகளில் அதிக அளவு மின்சாரம் தயாரிக்கப்படுவதால், அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்படும் அணு சக்தி நீர் மூழ்கிக்கப்பல்களில் 25 வருட காலத்துக்கு எரிபொருள் நிரப்ப தேவை இல்லை. ஆனால் இவற்றைதயாரிக்க அதிக பொருட்செலவாகும் என்பதால், பல உலக நாடுகள் சாதாரண நீர் மூழ்கிக் கப்பல்களையே பயன்படுத்துகின்றன. உலகின் முதல் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தயாரித்தது. அமெரிக்க கப்பல் படைக்கு புதிய அணு நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்க 1951 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசு உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்க கப்பல் படைஅதே ஆண்டு டிசம்பர் மாதம், புதிய நீர் மூழ்கிக் கப்பல் - Nautilus என அழைக்கப்படும் என அறிவித்தது. இந்த நீர் மூழ்கிக்கப்பல் கட்டிமுடிக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகமானது.

இது தொடர்பான செய்திகள் :