உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் செலுத்தப்பட்டது

Home

shadow

          1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாள் உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான டெல்ஸ்டார் (Telstar) செலுத்தப்பட்டது. செயற்கை கோளின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் அளப்பரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்கு அடித்தளமாக அமைந்தது டெல்ஸ்டார் செயற்கை கோளாகும். பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த டெல்ஸ்டார்  செயற்கை கோள், 1962-ஆம் ஆண்டு ஜுலை  10-ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் டெல்டா ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 5,933 கிலோ மீட்டர்  தொலைவில் பூமத்திய ரேகைக்கு 45 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கை கோள், பூமியை 2 மணி நேரம் 37 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வரும். விண்ணில் செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஜூலை 23-ஆம் தேதி டெல்ஸ்டார் செயற்கைகோள்  உதவியுடன் தொலைக்காட்சி ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையும், பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரமும் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.


இது தொடர்பான செய்திகள் :