ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது

Home

shadow

     1946 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முக்கிய அங்கங்களுள் பாதுகாப்பு சபையும் ஒன்று. முதலாம் உலகப் போருக்கு பின் உலக அமைதியைக் காக்க அமைக்கப்பட்ட (League OF Nations) நாடுகளின் லீக் அமைப்பு வலுவிழந்தது. அதனால் இரண்டாம் உலகப் போருக்கு பின் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக வலுவான ஓர் அமைப்பை உருவாக்க உலக நாடுகள் முடிவு செய்தன. அதன்படி 1945 ஆம் ஆண்டு ஐநா சபையின் ஓர் அங்கமாக பாதுகாப்பு சபை நிறுவப்பட்டது. ஐநா பாதுகாப்பு சபையில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றுள் ரஷ்ய, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகள். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை நிராகரிக்க இந்த நாடுகளுக்கு அதிகாரம் உண்டு. அமைதி காக்கும் படை மற்றும் ராணுவப் படைகள்ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கீழ் இயங்கும். பாதுகாப்பு கவுன்சிலுக்கு தேவைப்படும் நிதி உலக நாடுகளிடம் இருந்து மற்றும் ஐநா-வின் பட்ஜெடில் இருந்து பெறப்படும்.

இது தொடர்பான செய்திகள் :