ஓப்பெக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது)

Home

shadow


      1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் ஓப்பெக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஓப்பெக், எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கப் பெயராகும். 1949ஆம் ஆண்டு வெனிசுலா, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா ஆகிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குள்ளே நெருங்கிய உறவையும், தொடர்பையும் ஏற்படுத்த இந்த கூட்டமைப்பு முதலில் தொடங்கப்பட்டது. பின்பு 1960ஆம் ஆண்டில் அமெரிக்கா எண்ணை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளுக்காக இயற்றிய சட்டம் வெனிசுலா நாட்டின் எண்ணெய்க்கு வரம்பு விதித்தும், மெக்சிக்கோ, கனடா நாடுகளின் எண்ணெய்க்குச் சார்பாகவும் அமைந்தது. இதன் காரணமாவே ஈராக்கின் பாக்தாத் நகரில் ஓப்பெக் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1960 முதல் 2007 வரை பல நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைந்தும் விலகியும் வருகின்றன. ஈராக் போரை அடுத்து அந்நாட்டு நிர்வாகத்தைக் கையில் வைத்திருந்த காலத்தில் அமெரிக்காவும் இவ்வமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தது. தற்போது  12 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்துள்ள இந்த கூட்டமைப்பு தனித்தனியாகவும், ஒரு குழுவாகவும் எண்ணை நாடுகள் தங்களது நலத்தைப் பேணுவதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதும், உலக அரங்கில் எண்ணை விலை நிலையாக இருப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதும் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :