கல்பனா சாவ்லா மறைந்தார்

Home

shadow

    2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஓடம் கொலம்பியா வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உயிரிழந்தார். 1962 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. சண்டிகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் வானூர்தி பொறியியல் (Aeronautical Engineering) படித்த கல்பனா 1982 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று அங்கு அதே துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின் இரண்டாவது முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 1988 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் சேர்ந்து பணியாற்றினார். 1991ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். அதன் பின் முதல் விண்வெளி பயணத்துக்கு 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கொலம்பியா (Columbia) விண்வெளி ஓடத்தில் முதன் முதலாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். ராகேஷ் ஷர்மாவுக்கு பின் விண்வெளியில் பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர், முதல் இந்தியப்பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இரண்டாவது முறையாக விண்வெளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட கல்பனா சாவ்லா 2003ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கொலம்பியா விண்வெளி ஓடத்தில் 6 பேர் குழுவுடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய கொலம்பியா விண்வெளி ஓடம் இயந்திர கோளாறு காரணமாக பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது வெடித்து சிதறியது. 

இது தொடர்பான செய்திகள் :