காங்கோவிலிருந்து இடி அமீன் வெளியேற்றம்

Home

shadow

                                 1989 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி உகாண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் காங்கோ நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1920-களில் பிறந்த இடியமின் சமையல் நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் உகாண்டா ராணுவத்தில் ராணுவ வீரகளுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டார். ராணுவத்தில் சிப்பாய் ஆனார். ராணுவ வீரர், சார்ஜன்ட், தலைமை படை அதிகாரி, படைத் தளபதி, Field Marshal என படிப்படியாக பதவி யர்வு பெற்றார்ராணுவ நிதியைத் தவறாகக் கையாண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தை அடுத்து அவரை கைது செய்யா உகாண்டா அரசு முடிவு செய்தது. இந்நிலையில், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சி மூலம்  ஆட்சியைக் கவிழ்த்து  உகாண்டாவின் அதிபராக பதவியேற்றார் இடி அமீன். ஆறுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த இடியமினுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன. இனப் படுகொலை, அரசியல் அராஜகம், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் என இடி அமீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. லட்சக்கணக்கான மக்களை கொன்றுள்ள இடியமின் மனித ரத்தம் குடிப்பார் எனவும், மனித மாமிசம் சாப்பிடுவார் எனவும் கூறப்பட்டது. உகண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 1989 ஆம் ஆண்டு , Zaire  என்று அழைக்கப்பட்ட காங்கோ நாட்டின் வழியே உகாண்டாவுக்குள் நுழைய இடி அமீன் திட்டமிட்டார் . அதற்காக ஜனவரி 12 தேதி வேறு பெயரில் காங்கோ நாட்டுக்குள் நுழைய முயற்சித்த இடி அமீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த இடி அமீன் 2003 ஆம் ஆண்டு உயிரிழந்தார்

இது தொடர்பான செய்திகள் :