காந்தி-ஸ்மட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்து

Home

shadow

         1914 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி காந்தி-ஸ்மட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் 62,000 இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். 1890களின் இறுதியில் இந்தியர்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் தென் ஆப்ரிக்கா அரசு சட்டம் இயற்றியது. தென் ஆப்ரிக்காவின் 5 வருடங்கள் கூலிகளாக வேலை செய்த பின் இந்தியர்கள் தாய் நாடு திரும்ப வேண்டும். இதனை கடைபிடிக்காதவர்கள் மூன்று பவுண்ட் வருடாந்திர வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் வலியுறுத்தியது. லண்டனில் படித்த வழக்கறிஞர் மோகன்தாஸ் காந்தி 1893 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக தென் ஆப்ரிக்கா வந்தார். தென் ஆப்ரிக்காவில் தங்கிய காந்தி, இந்தியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். 1906 கருப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியர்கள் உட்பட அனைத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும், அவர்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பன உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து முதன் முதலாக சத்தியாகிரக போரட்டத்தை தொடங்கினார் காந்தி. போராட்டங்கள் தொடர்ந்தன. 1913 ஆம் ஆண்டின் இறுதியில் பேரணிகள் நடைபெற்றன. காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தென் ஆப்ரிக்காவில் இருந்த தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதானால் டர்பன் நகரம் ஸ்தம்பித்தது. ஆங்கில அரசிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக தென் ஆப்ரிக்காவில் அதிகாரியாக இருந்த ஜெனெரல் Jan Christiaan Smuts – காந்தி இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்தியர்களின் குறைகளை தீர்க்கும் விதமாக ஓர் ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் பின் 21 வருடங்கள் தென் ஆப்ரிக்காவில் இருந்த காந்தி இந்தியா திரும்பினார். 

இது தொடர்பான செய்திகள் :