குளிர்கால ஒலிம்பிக் தொடங்கப்பட்டது

Home

shadow

                  1924 ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் நாள் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது,  பனிச்சூழலில் விளையாடப்படும் விளையாட்டுக்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பையாத்லான், bobsleigh, curling, ice hockey, Nordic skiing, figure skating ,speed skating cross-country skiing, Nordic combined, and ski jumping, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924ஆம் ஆண்டு பிரான்சின் சமோனிக்-சில் நடத்தப்பட்டன. 1924 ஆம் ஆண்டு முதல் 1936 ஆம் ஆண்டு வரை எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரினால் தொடர்ந்து போட்டிகள் நடத்த முடியாததால் நின்று போனது. 1948ஆம் ஆண்டு மீண்டும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. கோடைக்கால ஒலிம்பிக் நடத்தும் நாடே குளிர்கால ஒலிம்பிக்கையும் நடத்த தேர்வு செய்யப்பட்டது. மேலும் இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1986ஆம் ஆண்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழு எடுத்த முடிவின்படி இவ்விரு நிகழ்வுகளும் தனித்தனி நான்காண்டு சுழற்சியில் நடத்தப்படுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் நடந்த பிறகு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் நடத்தப்படுகிறது. இதன்படி 1992ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் 1994ஆம் ஆண்டு  நடத்தப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.


இது தொடர்பான செய்திகள் :