கோகோ கோலா வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டது

Home

shadow

            1893ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முதன் முதலாக கோகோ கோலா (Coca-Cola)-வின் வர்த்தக முத்திரை அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் காயமடைந்த கேணல் ஜான் பெம்பர்டன் (Colonel John Pemberton) என்பவர், மார்பின் (Morphine) என்ற ஒரு வகை வலிநிவாரண மருந்துக்கு அடிமையானார். அதற்கு மாற்றாக வேறு ஒரு மருந்தை தேடினார். அவருடைய தேடுதலின் பயனாக உருவானதே கோகோ கோலா செய்முறை. Coca-Colaஎன்ற கார்பனேட் (carbonated) குளிர்பான வகை 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான போது அது ஒரு மருந்தாகவே விற்கப்பட்டது. கோகோ-கோலா மார்பின் (Morphine) அடிமையாதல், அஜீரணம், நரம்பு கோளாறுகள், தலைவலி போன்றவை பல நோய்களை குணப்படுத்தக்கூடியது என பெம்பர்டன் கூறினார். காஃபின் (Caffeine) கொண்ட கொலா கொட்டைகள் (kola nuts) மற்றும் கோகோ (coca) இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டதால், இந்த பானத்துக்கு. கோகோ கோலா (coca cola) என பெயர் சூட்டப்பட்டது. இதன் செய்தித்தாள் விளம்பரம் அதே ஆண்டு வரத் துவங்கியது. 1887ஆம் ஆண்டு அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகம் கோகோ-கோலா  (Coca-Cola)-வின் முத்திரை (trademark) பதிவை 1893ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வழங்கியது. அதன் பின் கோகோ-கோலா  (Coca-Cola)-லோகோவில் முத்திரை (trademark) என்ற சொல் இணைக்கப்பட்டது. தற்போது முத்திரை (trademark) என்ற சொல்நீக்கப்பட்டு அதன் அடையாளமான ஆர் ® என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :