1857ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாள் கொல்கத்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்திய மாநகரம் அப்போதைய கல்கத்தாவில் 1857ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி நிறுவப்பட்ட ஓர் தொன்மையான பொதுத்துறை பல்கலைக்கழகம். தெற்கு ஆசியாவில் பல்வேறு துறைகளைக் கொண்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட செராம்பூர் கல்லூரி இறையியலுக்கு பல்கலைக்கழக தரச்சான்று வழங்கப்பட்டு. இறையியலில் மட்டுமே பட்டம் வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மானியக் குழு கொல்கத்தா பல்கலைக்கழகத்தை ஐந்து நட்சத்திர பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் சீர்மைபெற வாய்ப்புள்ள மையங்களில் ஒன்றாகவும் அடையாளப்படுத்தியது. மாநில அரசால் நிர்வகிக்கப்படும் இந்த ஊரக பல்கலைக்கழகம் தனது ஆட்சிப்பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கி கட்டுபடுத்துகிறது. சிறந்த ஆய்வு மையமாகவும் செயல்படுகிறது. இதன் மைய வளாகம் கொல்கத்தாவின் காலேஜ் சாலையில் அமைந்துள்ளது.பிற வளாகங்கள் ராசா பசார், பாலிகஞ்ச், அலிப்பூர் அசுரா, சிந்தி என்று ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளன.