சாரணீய இயக்கம் தொடங்கப்பட்டது

Home

shadow

         1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாள் சாரணீய இயக்கம் தொடங்கப்பட்டது. சாரணியம் என்பது உலகளவில் இளைஞர்களின் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். 1906 மற்றும் 1907ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பேடன் பவல் பணி புரிந்துகொண்டிருந்தார். உளவு பார்த்தல் மற்றும் சாரணியம் என்பவற்றைப் பற்றி நூலொன்றை எழுதினார். பிரித்தானிய ஆபிரிக்காவின் பிரதம சாரணராக விளங்கிய பிரெடரிக் ரசல் புர்னாம், ஏர்னஸ் தொம்ப்சன் செடன், வில்லியம் அலெக்சாண்டர் சிமித், மற்றும் வெளியீட்டாளர் பியர்சன் ஆகியோரினால் ஏற்பட்ட தாக்க்த்தினால் பேடன் பவல் 1908இல் லண்டனில் இளைஞர்களுகான சாரணியம் எனும் நூலை எழுதி வெளியிட்டார். அத்துடன், 1907ஆம் ஆண்டு 20 சிறுவர்களை வைத்து இங்கிலாந்திலுள்ள பிறவுன்சித் தீவில் தனது நூலில் எழுதவுள்ள எண்ணங்களை பரிசோதிப்பதற்காக பாசறை ஒன்றையும் நடத்தினார். இப்பாசறையும், நூலுமே சாரணியத்தின் ஆரம்பங்களாகும்.

சாரணியம் தோற்றம் பெற்றதற்கு உத்வேகம் அளித்தது இளைஞர்களுகான சாரணியம் நூலின் வெளியீடு தான். பேடன் பவல், சிறுவயதில், இங்கிலாந்தின் பிரபலப் பொதுப் பாடசாலைகளில் ஒன்றான, சாட்டர் இல்லத்தில் இருந்த போது வெளியக செயற்பாடுகளில் நாட்டம் கொண்டதால் 1880 ஆம் ஆண்டு பிரிதானிய இந்தியாவில் இராணுவத்தில் கடமையாற்றிய பேடன் பவல் இராணுவ சாரணியத்தில் ஆர்வம் கொண்டதுடன் Reconnaissance and Scouting எனும் நூலையும் வெளியிட்டார்.


இது தொடர்பான செய்திகள் :