சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது

Home

shadow

           1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் வெளியிடப்பட்ட்து. 1889 ஆம் ஆண்டு பிறந்த சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளினின் பெற்றோர் இசைக்கலைஞர்களாக இருந்தனர். சாப்ளின் சிறு வயது முதலே மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற பத்து வயது முதலே இசைக்குழுக்களில் பங்கேற்றார். நகைச்சுவை நடிகராக விருப்பம் கொண்டு 14 வயதில் நாடகக்குழு ஒன்றில் சேர்ந்தார். அவருடைய சகோதரரான சிட்னியின் உதவியுடன் நாடகங்களில் தொடர்ந்து நடித்தார்.  1910ஆம் ஆண்டு தன்னுடைய 21 வது வயதில் நாடகங்களில் கதாநாயகனாக நடிக்கத்தொடங்கினார். இவர் பணியாற்றிய நாடகக்குழு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு லண்டன் திரும்பியபோது சாப்ளின் பலராலும் பாராட்டப்பட்டார். அமெரிக்காவில் இருந்த நியூயார்க் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. இதையடுத்து 1913 ஆம் ஆண்டு Los Angeles நகருக்கு வந்தார் சாப்லின். 24 வயதான சாப்லின் முதன் முதலாக திரைப்படத்தில் நடிக்கத்தொடங்கினார். அவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு ரெக்கர் செய்யும் ஒரு நாடு (The one-reeler Making a Living1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி வெளியிடப்பட்டது. நகைச்சுவை நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சுமார் 75 ஆண்டுகள் திரைத்துறையில் வரலாறு படைத்தார் சார்லி சாப்லின்.


இது தொடர்பான செய்திகள் :