சிங்கப்பூர் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது

Home

shadow

      1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் சிங்கப்பூர் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிங்கபூருக்கு முதன் முதலில் வந்திறங்கினர். 1824ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் சென்றது சிங்கப்பூர். மலாய் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் தோட்ட வேலைக்காக வந்த சீனர்களும் அதிக அளவில் குடியேறினர். முதல் உலகப்போரில் பெரிய அளவில் பாதிக்கப்படாத சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தாக்குதல்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. சிங்கப்பூரில் நடந்த போரில் பிரிட்டிஷ் படைகளை வென்றது ஜப்பான். ஆனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியுற்றதால், சிங்கப்பூர் மீண்டும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. சிங்கப்பூரில் உள்நாட்டு தேர்தல் நடைபெற்றாலும் முழுமையான சுய ஆட்சியளிக்க பிரிட்டிஷ் அரசு மறுத்து வந்தது. 1959ஆம் ஆண்டு சுயாட்சி உரிமை வழங்கப்பட்டாலும், வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற People's Action Party, மலாய் நாட்டுடன் சிங்கப்பூர் இணைய வேண்டும் என முடிவு செய்தனர்.  மலாய் பிரதமரின் அறிவுறுத்தலின் படி, மலாய், சிங்கப்பூர், ப்ருனே(pruene) உள்ளிட்ட நாடுகளை இணைத்து Federation of Malaysia என்று அழைக்கப்பட்ட மலேஷியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்தது. ஆனால் சில மாதங்களிலேயே சிங்கப்பூர் மாநில அரசுக்கும் மலேசியாவின் மத்திய அரசுக்கும் - அரசியல், பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதன் விளைவாக சிங்கப்பூரில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து செல்ல, மலேசிய நாடாளுமன்றம் வாக்களித்தது.

இது தொடர்பான செய்திகள் :