சீன மக்கள் குடியரசு வடக்கு வியட்நாம் அரசை அதிகார பூர்வமாக அங்கீகரித்தது

Home

shadow

         1950 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள்  சீன மக்கள் குடியரசு வடக்கு வியட்நாம் அரசை அதிகார பூர்வமாக அங்கீகரித்து தனது ராஜீய ரீதியிலான உறவுகளைத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், வியட்நாமில ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சுப் படைகள் முயன்று கொண்டிருந்தன. ஹோசிமின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் இதனை எதிர்த்துப் போராடி வந்தது. நடுநிலை வகிப்பது போன்ற தோற்றத்தை வெளியுலகில்ஏற்படுத்திய அமெரிக்கா, உண்மையில் பிரெஞ்சுப் படைகளுக்கு உதவிவந்தது. இச்சூழலை எதிர்கொள்ள சக கம்யூனிச நாடான சீனாவிடம் உதவி கோரியது வியட்நாம். இதற்கு ஒப்புக் கொண்ட சீனா, ஹோசிமின் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை அங்கீகரிப்பதாக அறிவித்து ராணுவரீதியிலான உதவிகளைச் செய்ய தொடங்கியது சீனா. இதையடுத்து அமெரிக்காவும் தனது நடுநிலைத் திரையை அகற்றி நேரடியாகக் களத்தில்இறங்கியது. இதுவே வியட்நாம் போரின் முக்கிய திருப்பமாக அமைந்தது.

இது தொடர்பான செய்திகள் :