செடான் வகை கார்கள்அறிமுகம்

Home

shadow

1913 ஆம்ஆண்டுஜனவரி 11 ஆம்தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற தேசிய ஆட்டோமொபைல் விழாவில் Sedan-வகை கார்களை முதன்முறையாக Hudson Motor நிறுவனம் வெளியிட்டது. பயணிகள் அமருவதுக்கு என்று தனிப்பகுதியும் பொருட்கள் வைப்பதற்கு என்று தனிப்பகுதியும் இதில் இருந்தது. Hudson Motor நிறுவனம் நான்கு கதவு கொண்ட sedan வகை கார்களை தயாரித்து, பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது.1909 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான Detroit-டை சேர்ந்த தொழிலதிபர்கள் இணைந்து Hudson Motor நிறுவனம் ஆரம்பித்தனர். ஆயிரம் டாலருக்கு குறைவாக உள்ள காரை தயாரிக்க அதன் தலைவர் Roy Chapin முடிவு செய்தார். இந்த நிறுவனத்துக்கு Joseph L. Hudson என்ற நபர் பொருளுதவி செய்ததால் Hudson Motor நிறுவனம் என பெயரிடப்பட்டது.இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான Hudson Twenty கார், அமெரிக்காவில் பெரும் வரவேற்பு பெற்றது. மற்ற கார் நிறுவனங்களை விட ஹுட்சனின் என்ஜின்கள் வலிமை வாய்ந்தவையாக இருந்தன. பல புதுமையான தொழில்நுட்பங்கள் ஹட்சன் கார்களில் இணைக்கப்பட்டதால், ஹட்சன் நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1954 ஆம் ஆண்டு ஹட்சன் நிறுவனம் வேறு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு அமெரிக்கன் மோட்டார்ஸ் நிறுவனமாக மாறியது.

இது தொடர்பான செய்திகள் :