செம்படை ஹெல்சிங்கி நகரை கைப்பற்றியது

Home

shadow

          1918 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள்  போல்ஷ்விக் கிளர்ச்சியாளர்களின் செம்படை ஃபின்லாந்தின் ஹெல்சிங்கி நகரைக்கைப் பற்றியது. 1550 ஆம் ஆண்டு குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிய மன்னரால் நிறுவப்பட்டது ஹெல்சிங்கி நகரம்.1809 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஃபின்லாந்தைக் கைப்பற்றிய ரஷ்ய மன்னர் முதலாம் அலெக்ஸாண்டர் 1812 ஆம் ஆண்டு அதன் தலை நகரை டுர்க்குவிலிருந்து ஹெல்சிங்கிக்கு மாற்றினார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் காரணமாக ஜார்மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்து ரஷ்யாவில் இடைக்கால அரசு அமைந்தது. அதே நேரத்தில் ஃபின்லாந்திலும் புரட்சிபரவத் தொடங்கியது. ரஷ்ய ஆதரவுடன் செயல்பட்ட பின்லாந்து அரசின்சிவில் படைகளுக்கும் தொழிலாளர்களின் செம்படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரஷ்யாவில் அமைந்தபோல் ஷ்விக் அரசு ஃபின்லாந்துக்குச் சுதந்திரம் அளித்தது. இதையடுத்து ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் நாட்டில் குழப்பம் அதிகரித்தது. அரசின் வெண்படைகளுக்கும் புரட்சியாளர்களின் செம்படைகளுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. 1918  ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் செம்படையினர் ஹெல்சிங்கி நகரைக்கைப் பற்றித் தங்கள் வசம் கொண்டுவந்தனர்.


இது தொடர்பான செய்திகள் :