சேலஞ்சர் விண்வெளி ஓடம் வெடித்தது

Home

shadow

                       1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள்  அமெரிக்காவின் சேலஞ்சர் விண்வெளி ஓடம் நடுவானில் வெடித்துச் சிதறியது.அதில் பயணித்த ஏழுபேரும் உயிரிழந்தனர். 1983 ஆம் ஆண்டு முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சேலஞ்சர்விண்கலம், அடுத்தடுத்து ஒன்பது முறை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பியிருந்தது. இதையடுத்து சேலஞ்சர் விண்வெளி ஓடத்தின் பத்தாவது பயணத்தில் விண்வெளிக்குச் செல்ல ஏழு பேர்தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்குச் செல்லத்த யாரான சேலஞ்சரின் பயணம் மோசமான வானிலை காரணமாகப் பலமுறை தள்ளிப் போடப்பட்டது. இறுதியில் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் விண்ணில் சீறிப்பாய்ந்த சேலஞ்சர் விண்கலம் எழுபத்து மூன்றாவது வினாடியில் வெடித்துச் சிதறியது. அதில் பயணம் செய்த ஏழுபேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்துக் கண்டறிய அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட ரோஜர்ஸ் கமிஷன், ஓ-ரிங்ஸ் எனப்படும் பாதுகாப்பு வளையங்கள் கடும் குளிர்காரணமாகச் செயல்படாமல் போனதே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறிந்தது. இந்த விபத்துக்குப் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலும் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, சுமார் மூன்றாண்டு காலத்திற்கு விண்வெளி ஓடங்கள் அனுப்புவதை நிறுத்திவைத் திருந்தது.


இது தொடர்பான செய்திகள் :