சோவியத் யூனியன் ஜப்பானுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

Home

shadow

             1925 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் பரஸ்பர ஒத்துழைப்புடன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் சோவியத் யூனியனும் ஜப்பானும் கையெழுத்திட்டன. 1904 – 05 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சோவியத் ஜப்பான் போரில் சோவியத் தோல்வி அடைந்தது. இதையடுத்து இருநாட்டு உறவுகளும் மிகவும் சீர்கெட்டிருந்தன. ரஷ்யப் புரட்சியின் போது ஜப்பான் சைபீரியாவை ஆக்கிரமித்தது, புரட்சி செய்த செம்படைகளுக்கு எதிராக ரொமனோவ் பேரரசின் வெள்ளைப் படைகளை ஜப்பான் ஆதரவளித்தது. ஆனால் ரஷ்யாவில் ரொமானோவ்வமிசத்தின் ஆதிக்கம் முடிவுக்குவந்து, போல்ஷ்விக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து ஜப்பானுடனான உறவுகளை மேம்படுத்த போல்ஷ்விக் அரசு முயற்சித்தது. பீஜிங் நகரில் நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சோவியத்துடன் ராஜீய உறவுகளைத் தொடர ஜப்பான் ஒப்புக்கொண்டது. 1925 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் இதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி, 1905 ஆம் ஆண்டின் போர்ட்ஸ்மவுத் ஒப்பந்த ஷரத்துகளை மதிப்பதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டது. பதிலுக்கு சகாலின் தீவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற ஜப்பான் ஒப்புக்கொண்டது.


இது தொடர்பான செய்திகள் :