ஜெர்மனி போலந்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

Home

shadow

         1934 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் ஜெர்மனியும் போலந்தும் பத்து ஆண்டு காலத்திற்கு ஆக்கிரமிப்புத்த விர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதன்படி இருநாடுகளும் தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. வெர்சைலஸ் ஒப்பந்தப்படி எல்லைகளை வரையறுப்பதில் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஒருபுறம் ஜெர்மனி, மறுபுறம் சோவியத் என அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போலந்து பிரான்சின் உதவியை நாடியது. இந்நிலையில் ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அடால்ஃப் ஹிட்லர் போலந்துடன் அரசியல் ரீதியில் நல்லுறவை ஏற்படுத்த முயன்றதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையே ஆக்கிரமிப்புத்த விர்ப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், போலந்தை இரு கூறுகளாகப் பங்கிட்டுக் கொள்வது என சோவியத் அதிபர் ஜோசஃப் ஸ்டாலினுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்ட ஹிட்லர் 1939 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி, போலந்து நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தார். மறுபுறத்தில் சோவியத்தின் ஆக்கிரமிப்பு தொடங்கியது. இதுவே இரண்டாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளியானது.


இது தொடர்பான செய்திகள் :