ஜெர்மனியின் பிரதமரானார் அடோல்ப் ஹிட்லர்

Home

shadow

         1933 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஜெர்மனியின் பிரதமரானார் வேந்தர் (Chancellor) அடோல்ப் ஹிட்லர். நாசி கட்சி என்று அழைக்கப்பட்ட தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் தலைவராக 1921ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப்போரில் தோற்ற ஜெர்மனி வெர்செயில்ஸ் (Versailles) ஒப்பந்தத்தில் இருந்த கடுமையான சமாதான விதிமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மோசமாக இருந்த பொருளாதார நிலையால் ஜெர்மனி மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். மக்களின் இந்த மனநிலையை தனக்கு சாதகமாக்க முயன்றார் நாசி கட்சியின் தலைவரான ஹிட்லர். 1932ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஜெர்மனியின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியை உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாக்க முடிவு செய்தார் ஹிட்லர். இதற்கான பணிகளை மிக விரைவாக தொடங்கினார். மக்களின் ஆதரவையும் பெற்றார். ஜெர்மனியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கிய திருப்புமுனையாக இது அமைந்தது. பின்னாளில் இரண்டாம் உலகப்போர் உருவாக முக்கிய காரணமாக இருந்தார் ஹிட்லர்.


இது தொடர்பான செய்திகள் :